என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெப்பத்தின் தீவிரம் குறையும்: வானிலை மையம்
    X

    வெப்பத்தின் தீவிரம் குறையும்: வானிலை மையம்

    ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வெப்பத்தின் தீவிரம் சற்று குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக அனல் காற்று வீசுகிறது. அதன் தாக்கத்தால் இரவில் கூட வெப்பம் குறையாமல் இருக்கிறது.

    சென்னை நகரை பொறுத்தவரை நேற்று பகலில் அனல் காற்று வீசியது. மாலையில் சென்னை நகர மக்கள் மெரினா கடற்கரைக்கு சென்று வெப்பத்தை போக்கிக்கொண்டனர்.

    கடந்த சில நாட்களாக ஆந்திராவில் அனல் காற்று தீவிரமாக வீசுகிறது. அதன் காரணமாக சிலர் இறந்து உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெப்பம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    தமிழ்நாட்டில் கிழக்குமற்றும் தென் கிழக்கு பகுதியில் இருந்து ஓரளவுக்கு ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது. அந்த காற்று தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு வீசும்.

    அதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தீவிரம் சற்று குறையும். சென்னையில் 2 நாட்களும் அதிகபட்சம் 96.8 டிகிரி அல்லது 98.6 டிகிரி வெயில் மட்டுமே பதிவாகும். வடக்கு உள் மாவட்டங்களில் வெப்பக்காற்று இன்று (திங்கட்கிழமை) காலை வரை வீசும்.

    அடுத்த 48 மணிநேரத்திற்கு கடல் பகுதியில் காற்றின் வேகம் தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்கும். மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும். அதனால் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்கள் கடலுக்குள் கவனத்துடன் செல்லவேண்டும்.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×