என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு
    X

    தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டுக்கு தீ வைப்பு

    தேவகோட்டை அருகே முன்விரோதத்தில் பெண்ணின் வீட்டை தீ வைத்து கொளுத்திய உறவினரை போலீஸ் தேடுகிறது.

    கல்லல்:

    தேவகோட்டை அருகே உள்ள சின்னவெளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது48). இவரது உறவினர் முத்து (36). இருவருக்கும் இடையே சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்து பொன்னம்மாள் ஊர் பெரியவர்களிடம் சென்று முறையிட்டார்.

    அவர்கள் முத்துவிடம் இதுபற்றி கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து நேற்று இரவு பொன்னம்மாள் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டை தீ வைத்து கொளுத்தவிட்டு ஓடி விட்டார். மளமளவென்று தீப்பிடித்து கொண்டதில் வீட்டில் இருந்த 10 மூடை நெல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    இது குறித்து பொன்னம்மாள் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×