என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவளம் அருகே கோவில் குளத்தில் வாலிபர் பிணம்
    X

    கோவளம் அருகே கோவில் குளத்தில் வாலிபர் பிணம்

    கோவளம் அருகே கோவில் குளத்தில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை

    மாமல்லபுரம:

    கோவளம் அருகே உள்ள திருவடந்தையில் நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை குளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடினர். அப்போது தண்ணீருக்கு அடியில் சேற்றில் சிக்கி இருந்த வாலிபர் உடலை மீட்டனர்.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவருக்கு சுமார் 20 வயது இருக்கும். உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவில் குளத்தில் வாலிபர் சிலர் நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர். அவரை மர்ம நபர்கள் கடத்தி கொன்று குளத்தில் வீசினார்களா? அல்லது நண்பர்களுடன் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானாரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×