என் மலர்
செய்திகள்

மலேசியா செல்லும் விமானத்தில் சென்னை வாலிபர்களிடம் ரூ.28 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் சென்னை வாலிபர்களிடம் ரூ.28 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
ஆலந்தூர் :
சென்னை விமான நிலை யத்தில் இன்று அதிகாலை மலேசியா செல்லும் விமானம் புறப்பட தயா ராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த மனோகர், குமாரின் கைப்பை, சூட்கேசை சோதனை செய்த போது கட்டு கட்டாக அமெரிக்க டாலர் பணம் இருந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும்.
பணத்திற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவை ஹவாலா பணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பிடிபட்ட குமார், மனோகரிடம் விசாரணை நடக்கிறது.
இதே போல் நேற்று காலை இலங்கை செல்லும் விமானத்தில் சென்னையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.31 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story






