என் மலர்
செய்திகள்

வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலி
சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் பகுதியில் வாகனம் மோதி ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:
வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (36). சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சொந்த வேலை காரணமாக ஆற்காடு வந்த அவர் நேற்று பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்றார்.
சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பெரிய காஞ்சீபுரம் அப்பாராவ் தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை (72). இவர் தனது உறவினர் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காஞ்சீபுரம் பொன்னேரிக்ரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஷேர்ஆட்டோ சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அப்பா துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமைனயில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

Next Story