என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட்– விவசாயிகள் 18–ந்தேதி சாலை மறியல்
    X

    திருமானூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட்– விவசாயிகள் 18–ந்தேதி சாலை மறியல்

    திருமானூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட்– விவசாயிகள் சார்பில் 18–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.

    திருமானூர்:

    பெரியப்பட்டாக்காடு விவசாயிகள் பூர்வீகமாக பயன்படுத்தி வரும் நிலத்திற்கு செல்லும் வண்டிப்பாதையில் தனியார் லாரி உரிமையாளர்கள் கல்லோடு லாரிகளை ஓடவிட்டு ஆக்கிரமிப்பு செய்திருப்தை கண்டித்தும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடந்தையாக இருப்பதை கண்டித்தும, கல்லோடு லாரிகள் தினசரி 100க் கணக்கான லாரிகள் செல்லுவதால், மழைக்காலங்களில் நிலங்களில் நீர்தேக்கம் ஏற்படுவதாலும் விவசாயத்தை பாதுகாத்திட வண்டி பாதையில் தனியார்கல் லாரிகள் செல்வதை தடுக்க வேண்டியும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் பெரியப்பட்டாக்காடுவிவசாயிகளும் வருகிற 18–ந்தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் ஏலாக்குறிச்சி கடைவீதி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி. ஆறுமுகம் தலைமையில் சாலைமறியல் போராட்டம் செய்யபோவதாக அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரா.உலகநாதன் மறியல்போராட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    மேலும் ராமானுஜம் ,கலியபெருமாள், தனவேல், சங்கர், ரவிசந்திரன், சுந்தர்ராஜ், முருகானந்தம், சீமோன், ராஜேந்திரன்,சேகர், தமிழ்செல்வன், முருகானந்தம், குணசேகர், பழனியாண்டி, மாலா, பன்னீர்செல்வம், கருப்புச்சாமி, பக்கிரிசாமி, கிருஷ்ணமூர்த்தி,ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜெயராஜ் ஒன்றிய துணைசெயலாளர் பரிசுத்தம், ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    சாலைமறியல் போராட்ட ஏற்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட்கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி.ஆறுமுகம், திருமானூர் ஒன்றிய குழு பெரியபட்டாக்காடு கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    Next Story
    ×