என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டிவாக்கத்தில் குப்பை லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
    X

    கொட்டிவாக்கத்தில் குப்பை லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி

    கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே மாநகர குப்பை லாரி மோதி ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    திருவான்மியூர்:

    திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் களத்துமேடு 4–வது தெருவைச் சேர்ந்தவர் சைமன் (50). ஆட்டோ டிரைவர். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சைமன் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க் அருகே திரும்பும்போது மாநகர குப்பை லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சைமன் அதே இடத்தில் நசுங்கி பலியானார்.

    லாரி டிரைவர் மற்றும் கிளினர் தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×