என் மலர்
செய்திகள்

திருப்போரூர் அருகே பா.ம.க பிரமுகர் மீது தாக்குதல்: தந்தை–மகன் கைது
திருப்போரூர் அருகே பா.ம.க பிரமுகர் தாக்கிய தந்தை–மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்போரூர்:
காயாரை அடுத்த பனங்காட்டுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் பா.ம.க ஒன்றிய தலைவர். இவருடைய நண்பர் கண்ணதாசன். இவருக்கும், மாம்பாக்கம் ஜோதி நகரைச்சேர்ந்த சந்துரு என்ற சங்கருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து இருவரும் தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதில் கண்ணதாசனுக்கு ஆதரவாக அருண்குமார் சமாதானம் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், மற்றும் அவரது மகன் ஜெகதீப் ஆகியோர் நேற்று இரவு கொளத்தூர் பஸ் நிலையம் அருகே அருண்குமாரை வழிமறித்து தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அருண்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த காயார் சப்–இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி வழக்குபதிவு செய்து சங்கர், அவரது மகன் ஜெகதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story






