என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் ஐந்து ரதத்தை பார்க்க கூடுதல் கட்டணம்: மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்
மாமல்லபுரத்தில் ஐந்து ரதத்தை பார்க்க கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நலக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெவிரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதியை பார்க்க இந்தியர்களுக்கு ரூ. 10–ம், வெளிநாட்டவர்களுக்கு ரூ. 250–ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தியர்களுக்கு ரூ. 30–ம், வெளிநாட்டினருக்கு ரூ. 500–ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
தொல்லியல் துறையினரின் இந்த திடீர் கட்டண உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி மாமல்லபுரத்தில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.

Next Story