என் மலர்
செய்திகள்

மாதசீட்டு நடத்தியதில் தாய் நஷ்டம் அடைந்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
மாதசீட்டு நடத்தியதில் தாயார் நஷ்டமடைந்ததால் அவரது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபம் சுதானா நகரை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி நாகவள்ளி (வயது 50). மகன்,பிரபாகரன் (26).
நாகவள்ளி மாதசீட்டு நடத்தி வந்தார். இதில் பணம் எடுத்தவர்களில் பலர், முறையாக அந்த தொகையை செலுத்தவில்லை. ஆனால் சீட்டுக்கான பணத்தை மாதந்தோறும் முறைப்படி செலுத்தி முடித்தவர்கள் தங்களுடைய முதிர்வு தொகையை திருப்பி தருமாறு கேட்டனர்.
மாதசீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால், நாகவள்ளி அவதியடைந்து வந்தார். மேலும் இந்த கடன் தொல்லையால் அவரது குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவரது மகன் பிரபாகரன்,வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபாகரனின் உடலை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






