என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே ஆற்றில் விழுந்த விவசாயி பலி
    X

    வேதாரண்யம் அருகே ஆற்றில் விழுந்த விவசாயி பலி

    வேதாரண்யம் அருகே ஆற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் சாக்கையர் பகுதியில் வசிப்பவர் மயிலாடுதுறையை சேர்ந்த அய்யப்பன். விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

    இவர் சாக்கையில் புனிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசித்துவந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று சாக்கையில் சட்ரஸ் பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்தபோது அவர் தவறி ஆற்றில் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி அய்யப்பனின் உடலை கைப்பற்றினர். இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×