என் மலர்
செய்திகள்

செந்துறையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
கருணாநிதியை அவதூறாக பேசிய வைகோவை கண்டித்து செந்துறையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செந்துறை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசிய வைகோவை கண்டித்து செந்துறையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி.தலைமை தாங்கினார்.
இதில் மாநில பொது குழு உறுப்பினர் பூ.செல்வராஜ். கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய துணை செயலாளர் எழில்மாறன். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், ஒன்றிய அவை தலைவர் சிவபிரகாசம் , ஞானம்பா பேங்கு செல்வராஜ், ஊராட்சி செயலாளர்கள் குழூமுர் முகமது அலி,கார்மேகம், மற்றும் கழக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வைகோவின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






