என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியர்களுக்கு பிரான்ஸ் அரசு பென்ஷன் தருகிறதா?: புதுச்சேரியில் களைகட்டும் புதுவித மோசடி
    X

    இந்தியர்களுக்கு பிரான்ஸ் அரசு பென்ஷன் தருகிறதா?: புதுச்சேரியில் களைகட்டும் புதுவித மோசடி

    பிரான்ஸ் நாட்டு காலனி பகுதியாக இருக்கும் புதுச்சேரியில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பிரான்ஸ் நாட்டு அரசு ஓய்வூதியம் வழங்குவதாக பரவிவரும் மோசடித்தனமான புரளிகளை நம்ப வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
    புதுவை:

    இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் புதுச்சேரியில் பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும் இருந்துவந்தது. சுதந்திரத்துக்கு பின்னர் அந்த உரிமை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 1962-ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்து, புதுச்சேரியில் வசித்துவருபவர்களுக்கு பிரான்ஸ் அரசு ஓய்வூதியம் அளித்து வருவதாககூறி, சில சமூகவிரோதிகள் இங்குள்ள மூத்த குடிமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சலுகையை பெற ஆசைப்படும் முதியவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் கமிஷனாக ஆயிரக்கணக்கில் பணத்தையும் சிலர் பெற்றுவருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் தலைமை செயலாளர் மனோஜ் பரிடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் 1962-ம் ஆண்டுக்கு முன்னர் புதுச்சேரியில் பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் நாட்டு அரசு பென்ஷன் வழங்குவதாக வெளியாகியுள்ள வதந்திகள் முற்றிலும் தவறானவை. அதைப்போன்றதொரு புதிய சட்டம் ஏதும் பிரான்ஸ் அரசு சமீபத்தில் இயற்றவில்லை. அப்படியொரு திட்டமும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.

    எனவே, இதுபோன்ற போலி வாக்குறுதிகளுடன் யாராவது உங்களை நாடிவந்தால் இதுதொடர்பாக அருகாமையில் இருக்கும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×