என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணி அருகே இளம்பெண் தற்கொலை
வேளாங்கண்ணி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நெட்டலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மா தேவி (35).இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
இதனால் அவதிப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






