என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே பிளஸ்–2 மாணவியை கற்பழித்து ஏமாற்றிய வாலிபர் போலீசில் புகார்
    X

    பண்ருட்டி அருகே பிளஸ்–2 மாணவியை கற்பழித்து ஏமாற்றிய வாலிபர் போலீசில் புகார்

    பண்ருட்டி அருகே பிளஸ்–2 மாணவியை கற்பழித்து ஏமாற்றிய வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெனிதா (வயது 17). (பெயர் மாற்றம்). பிளஸ்–2 மாணவி. இவரது தாயார், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் மீது பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் கூறியிருப்பதாவது:–

    எனது மகள் ஜெனிதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு ‘திடீர்’ உடல் நல குறைவுடன் மாலையில் வீடு திரும்பினார். பின்னர் அவள் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த மணிகண்டன் எங்களுடைய வீட்டுக்குள் புகுந்தான். ஜெனிதாவை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டு தப்பி சென்றான்.

    இதுபற்றி தகவல் அறிந்து திடுக்கிட்டு, அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று தட்டிக் கேட்டோம். உடனே மணிகண்டனும் அவரது குடும் பத்தினரும் எங்களை சமாதானப்படுத்தினர். ஜெனிதாவை மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார்கள். அதனை நம்பி எனது குடும்பத்தினர் அமைதியாக வீடு திரும்பி விட்டோம்.

    அதன்பிறகு வெளி மாநிலத்துக்கு வேலைக்கு சென்ற மணிகண்டனுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக தெரியவந்தது. மேலும், அந்த திருமணம் முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு மணிகண்டன் தப்பி செல்ல முயற்சி நடப்பதாகவும் தெரிகிறது. எனவே இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜெனிதாவின் தாயார் போலீசில் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் மணிகண்டன் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×