என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே காதலிக்கக்கோரி மாணவிக்கு மிரட்டல் வாலிபர் கைது
    X

    நாகை அருகே காதலிக்கக்கோரி மாணவிக்கு மிரட்டல் வாலிபர் கைது

    நாகை அருகே காதலிக்கக்கோரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள சிக்கல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 10–ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த அப்பு(எ) காளிதாஸ்(22) என்பவர் அவரிடம் காதல் செய்வதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    மேலும் சம்பவத்தன்று காளிதாஸ் மாணவியை தகாத வார்தையினால் திட்டி, திருமணம் செய்து கொள், இல்லை கட்டாய தாலி கட்டிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இயைடுத்து மாணவியின் தந்தை கீவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் வழக்கு பதிவு செய்து காளிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×