என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே சுவர் இடிந்து 2–ம் வகுப்பு மாணவர் பலி
    X

    சீர்காழி அருகே சுவர் இடிந்து 2–ம் வகுப்பு மாணவர் பலி

    சீர்காழி அருகே சுவர் இடிந்து 2ம் வகுப்பு மாணவன் பலியானான்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புதுப்பட்டினம் காவிரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் சிவா (8). இவன் புதுப்பட்டினம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று விடுமுறை என்பதால் மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள தனது மாமா வீரபாண்டியன் வீட்டிற்கு சென்று இருந்தான்.

    அங்கு பாழடைந்து பராமரிப்பு இன்றி இருந்த கூரை வீடு முன் விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிவா பலத்த காயம் அடைந்தான். அவனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தான். இது குறித்து கொள்ளிடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×