என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே பொதுதேர்வு சரியாக எழுதாததால் தீக்குளித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி சாவு
    X

    விருத்தாசலம் அருகே பொதுதேர்வு சரியாக எழுதாததால் தீக்குளித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி சாவு

    விருத்தாசலம் அருகே பொதுதேர்வு சரியாக எழுதாததால் தீக்குளித்து மாணவி இறந்தார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம், தச்சு தொழிலாளி. இவரது மகள் அனிதா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிள் 10–ம் வகுப்பு மாணவி.

    அனிதா, எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு எழுதிவந்தார். ஆங்கிலம் தேர்வை அவர் சரியாக எழுதவில்லை. இதனால் விரக்தியடைந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் உடல் கருகியதால் வேதனை பொறுக்கமுடியாமல் அலறினார். அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயை அணைத்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×