என் மலர்
செய்திகள்

சென்னை தொழில் அதிபரிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
உரிய ஆவணம் இல்லாததால் சென்னை தொழில் அதிபரிடம் ரூ.2½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை நகர் மானாமதுரை சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் கருப்பையா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன், ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 5,500 இருந்தது. காரில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தோல் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பாளர் பாபுலால் மகன் சேத்தன்குமார் (வயது35) இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காண்பித்த ஆவணங்கள் முரண்பாடாக இருந்தது.
எனவே பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்திட ஆர்.டி.ஓ. அரவிந்தன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story






