என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வடமதுரை அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
  X

  தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் ஸ்ரீபதி.

  வடமதுரை அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
  • திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

  வடமதுரை:

  வடமதுரை அருகே கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீபதி(50). லாரி டிரைவர். கடந்த சில நாட்களாக நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி போதும்பொண்ணு(24). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் போதும்பொண்ணு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  Next Story
  ×