என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
- கருப்பூர் அருகேயுள்ள பறவைகரடு பகுதி சேர்ந்த பச்சமுத்து என்பவர், இந்த பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார்.
- பங்க் ஊழியர் பச்சமுத்துவை அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. கருப்பூர் அருகேயுள்ள பறவைகரடு பகுதி சேர்ந்த பச்சமுத்து என்பவர், இந்த பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு பெட்ரோல் பங்கில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஓமலூர் அருகேயுள்ள கருப்பனம்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் மகன் சங்கர் (வயது 20), பாகல்பட்டி அருகேயுள்ள செம்மேடு பகுதியை சேர்ந்த வேலப்பன் மகன் காந்தி (27) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
. அப்போது பங்க் ஊழியர் பச்சமுத்து முன்னால் வந்தவர்களுக்கு பெட்ரோல் அடித்துக்கொண்டு இருந்துள்ளார். மது போதை–யில் இருந்த சங்கர், காந்தி ஆகிய இருவரும், எங்கள் வண்டிக்கு முதலில் பெட்ரோல் செலுத்துமாறு கூறினர். அதற்கு பச்சமுத்து சற்று பொறுங்கள், என்று கூறியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் நாங்கள் எவ்வளவு பெரிய ரவுடிகள் தெரியுமா? என்று கூறிக்கொண்டே பங்க் ஊழியர் பச்சமுத்துவை அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.






