search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் திருடிய 12 செல்போன்கள் பறிமுதல்
    X

    டி.எஸ்.பி. திருநாவுக்கரசு முன்னிலையில் மீட்கப்பட்ட செல்போன்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

    ரெயில்களில் திருடிய 12 செல்போன்கள் பறிமுதல்

    • மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு
    • மீதமுள்ள செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்

    வேலூர்:

    மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் பயணிகளிடம் அடிக்கடி செல்போன்கள் திருடுபோனது.

    இதுகுறித்து மஹாராஷ்டிரா மாநிலம் கோலாலம்பூர் போலீசில் பல்வேறு புகார்கள் பதிவானது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் செல்போனில் ஐ.எம்.இ.ஐ. எண் கொடுத்து இருந்தனர்.

    அதன்படி போலீசார் அந்த எண்ணை வைத்து சோதனை செய்தபோது திருடுபோன 17 செல்போன்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கோலாலம்பூர் போலீசார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு செல்போன்களின் விவரங்களை அனுப்பி வைத்தனர்.

    அதன் அடிப்படையில் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமை யிலான தனிப்படை போலீசார் மொத்தம் 13 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    ஒரு செல்போன் கொரியர் மூலம் கோலாலம்பூர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து கோலாலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகர் வாலி தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் இன்று வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அவர்களிடம் டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஏ.எஸ்.பி. (பயிற்சி) பிரசன்ன குமார் மீதமுள்ள 12 செல்போன்களை கோலாலம்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மீதமுள்ள செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×