என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மதுரவாயலில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

- வீட்டில் தனியாக இருந்த ஜெனிபர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஜெனிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போரூர்:
மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் டேவிட். தொழிலாளி. இவரது மகள் ஜெனிபர் (வயது15). போரூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த ஜெனிபர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜெனிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி ஜெனிபர் வீட்டின் அருகே உள்ள வாலிபருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் ஜெனிபரை "வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது" என்று கூறி கண்டித்தனர்.
இதனால் மனவேதனையில் இருந்த ஜெனிபர் தற்கொலை செய்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.