என் மலர்
செய்திகள்

நடிகர் ஷாருக் கானுக்கு டாக்டர் பட்டம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்
பாலிவுட் நடிகர் கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது ஐதராபாத் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. நாளை நடைபெற்றும் அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தில் பயின்ற 2,885 மாணவர்களுக்கும், தொலைதூர கல்வி மூலம் பயின்ற 44,235 பேருக்கும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளை செய்துவந்த 276 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்படுகிறது.
உருது மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டமைக்காக ரேக்தா அமைப்பின் நிறுவனரான ராஜிவ் சரஃப் என்பவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
Next Story