என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமீர்கானை வெறுக்கிறேன்: சல்மான் கான் பகீர் கருத்து
    X

    அமீர்கானை வெறுக்கிறேன்: சல்மான் கான் பகீர் கருத்து

    பாலிவுட் நடிகர் அமீர்கானை தொழில்ரீதியாக வெறுப்பதாக சகநடிகர் சல்மான் கான் தெரிவிக்கும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்து விட்டார்? என்பதை இங்கே பார்ப்போம்.
    அமீர் கானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தங்கல்’ திரைப்படம் நேற்று வெளியாகி, வசூல்ரீதியாகவும், விமர்சனங்கள் மூலமாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்-டின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

    இந்நிலையில், இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அமீர் கானுக்கு சகநடிகரான சல்மான் கான், தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நீங்கள் நடித்துள்ள ‘தங்கல்’ படத்தை என்னுடைய குடும்பத்தினர் நேற்று மாலை பார்த்தனர். நான் நடித்த ‘சுல்தான்’ படத்தைவிட உங்கள் படம் சிறப்பாக இருந்தாக அவர்கள் தெரிவித்தனர். உங்களை தனிப்பட்ட முறையில் நான் நேசித்தாலும், தொழில்ரீதியாக நான் வெறுக்கிறேன் என்று அந்த டுவீட்டில் சல்மான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு உடனடியாக தனது டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ள அமீர் கான், ‘உங்கள் வெறுப்பிலும் நான் நேசத்தையே பார்க்கிறேன். உங்களை வெறுப்பதைப்போல் நானும் நேசிக்கவே செய்கிறேன்’ (Sallu, in your 'hate' I feel only
    love. 'I love you like I hate you) என பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×