search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை விவரம்
    X

    2018 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை விவரம்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் விலை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் வலைத்தளத்தில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை ரூ.88,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கு்ம நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து ஹீரோ தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ரூ.88,000 என அந்நிறுவன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது தெரியவரும். இந்தியாவில் ரூ.88,000 விலையில் கிடைக்கும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களின் 200சிசி மாடல்களை விட இது குறைவு ஆகும்.



    இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4v மற்றும் பஜாஜ் பல்சர் 200NS விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விலை அடிப்படையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.

    புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.


    முன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் பின்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.

    வடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது.
    Next Story
    ×