search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஸ்பை விவரங்கள்
    X

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ஸ்பை விவரங்கள்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பை விவரங்களை பார்ப்போம். #HERO #motorcycle



    ஹீரோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அட்வென்ச்சர் டூரர் மாடல்களான எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி மாடல்கள் சோதனை செய்யப்படுகிறது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மிலானில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்ட போது இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதைக் கருத்தில் கொண்டே இப்போது எக்ஸ்பல்ஸ் தயாரிப்பில் ஹீரோ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

    புதிய எக்ஸ்பல்ஸ் 200 ஆஃப்-ரோடு மாடலாகவும், எக்ஸ்பல்ஸ் 200டி ரோட் சார்ந்த மாடலாக இருக்கிறது. இம்முறை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் எக்ஸ்பல்ஸ் 200 (மேட் ரெட்) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 டி (ரெட்) மாடல்கள் தெளிவாக தெரிகிறது. 

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் 17 இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது. வழக்கமான மாடலில் 21 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Autocarindia

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்கள் மற்றும் ப்ளூடூத், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகள் நிறைந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளில் 198சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம். மற்றும் 17.1 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என்றும் இதன் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    புதிய எக்ஸ்பல்ஸ் 200 மாடல் இந்தியாவில் பஜாஜ் 220எஃப், டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 2004வி மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×