search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இன்ஜின் தயாரிப்பில் புதிய மைல்கல் எட்டிய ஃபோக்ஸ்வேகன்

    இந்தியாவில் TDI ரக இன்ஜின்களை தயாரிப்பதில் ஃபோக்ஸ்வேகன் புதிய மைல்கல் எட்டியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1,00,000 TDI (டர்போசார்ஜ்டு டைரக்ட் இன்ஜெக்ஷன்) ரக டீசல் இன்ஜின்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த இன்ஜின் பூனேவில் இயங்கி வரும் சக்கன் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இரண்டு TDI  ரக இன்ஜின்கள் - 1.5 லிட்டர் TDI  யூனிட், 108 பிஹெச்பி பவர், 89 என்எம் டார்கியூ செயல்திறன், பெரிய 2.0 லிட்டர் TDI மோட்டார் 141 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் இன்ஜின்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது. 

    ஃபோக்ஸ்வேகன் தயாரித்த 1,00,000-வது இன்ஜின் 1.5 லிட்டர் TDI  மோட்டார் ஆகும். இந்த இன்ஜின் 108 பிஹெச்பி செயல்திறன் வழங்குகிறது. இது அதிகபட்சம் 250 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேனுவல் மற்றும் DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.



    இந்த இன்ஜின் ஃபோக்ஸ்வேகன் அமியோ, வென்டோ செடான் மற்றும் போலோ GT TDI மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான போலோ டீசல் இன்ஜின் 89 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. 

    2.0 லிட்டர் TDI இன்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டாப் என்ட் மாடல்களான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யுவி மற்றும் பசாட் செடான் மாடல்களில் வழங்கப்படுகிறது. டகுவான் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 141 பிஹெச்பி பவர் வழங்குகிறது. பசாட் இன்ஜின் மாடலில் 175 பிஹெச்பி பவர் வழங்குகிரது. இரண்டு இன்ஜின்களும் 2.0 TDI டைரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் (DSG) ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    Next Story
    ×