search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி தொகுதி
    X
    எடப்பாடி தொகுதி

    6-வது முறையாக களம் காணும் எடப்பாடி பழனிசாமி- தொகுதி கண்ணோட்டம்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் 6-வது முறையாக களம் காண்கிறார்.
    எடப்பாடி பழனிச்சாமி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 6,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 47,64,542.31
    3. அசையா சொத்து- ரூ. ஏதுமில்லை

    த. சம்பத் குமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 34,222
    2. அசையும் சொத்து- ரூ. 7,38,232.69
    3. அசையா சொத்து- ரூ. 35,00,000

    எடப்பாடி தொகுதி தமிழக முதல்-அமைச்சரின் சொந்த தொகுதி என்ற சிறப்பைக் கொண்டது. சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் எடப்பாடி உள்ளது. 1951-ம் ஆண்டு எடப்பாடி ஆனது சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது.

    இந்த தொகுதியில், வன்னியர், கொங்கு வேளாளர், முதலியார் சமூகத்தினர் அதிகளவு உள்ளனர்.

    கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பா.ம.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.-வாக இருக்கிறார். 4 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். ஒருமுறை அவர் தோல்வியை தழுவினார். இந்த முறை மீண்டும் அவர் அ.தி.மு.க. வேட்பாளராக களம் காண்கிறார்.

    விவசாயமும் நெசவுத் தொழிலும்தான் இந்த பகுதியின் பிரதானமான தொழில்களாக இருக்கிறது. காவிரி ஆறு ஓடக்கூடிய எடப்பாடி பகுதியில் சுற்றிலும் ஏரிகளும், குளங்களும் உள்ளன. குறிப்பாக அரிய வகை பாறைகள் உள்ளன. காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள எடப்பாடி தொகுதியில் நெசவும், விவசாயமும் பிரதான தொழில்கள். கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி மற்றும் சுடிதார் மெட்டீரியல்கள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல்-அமைச்சரின் தொகுதி என்பதால் கடந்த சில ஆண்டுகளில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நெசவுத் தொழிலின் கேந்திரமாக கருதப்படும் எடப்பாடி தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 757 பேர், பெண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 597 பேர், மூன்றாம் பாலினத்தினர் 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர். 

    திமுக சார்பில் த. சம்பத் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா, அமமுக சார்பில் பூக்கடை என்.சேகர் ஆகியோரும் களம் இறங்கியுள்ளனர்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    1951- எஸ்.அர்த்தனாரீசுவர கவுண்டர்- (காங்கிரஸ்)
    1967- ஏ.ஆறுமுகம்- (தி.மு.க.)
    1971- ஏ.ஆறுமுகம்- (தி.மு.க.)
    1977- ஐ.கணேசன்- (அ.தி.மு.க.)
    1980- ஐ.கணேசன்- (அ.தி.மு.க.)
    1984- கோவிந்தசாமி-  (காங்கிரஸ்)
    1989- எடப்பாடி கே.பழனிசாமி- (அ.தி.மு.க. (ஜெ))
    1991- எடப்பாடி கே.பழனிசாமி- (அ.தி.மு.க.)
    1996- ஐ.கணேசன்- (பா.ம.க.) 
    2001- ஐ.கணேசன்- (பா.ம.க.) 
    2006- வி.காவேரி- (பா.ம.க.)
    2011- எடப்பாடி கே.பழனிசாமி- (அ.தி.மு.க.)
    2016- எடப்பாடி கே.பழனிசாமி- (அ.தி.மு.க.)
    Next Story
    ×