என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவில் தொல். திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடலூர்:
வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர் அங்கு கடந்த 4 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த தொல். திருமாவளவன், அங்கு தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருமாவளவனின் மாற்று வேட்பாளராக காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் மணவாளனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Next Story