search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நாளை ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார்
    X

    வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நாளை ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார்

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆகிய 11 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா நாளை பிரசாரம் செய்கிறார்
    விழுப்புரம் :

    தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    விழுப்புரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆகிய 11 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களையும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ் பெண்ணாத்தூர் ஆகிய 2 சட்டசபை தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதையொட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புற வழிச்சாலையில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் வருகிறார். அங்கு அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு கீழ்பகுதியில் ஆண்கள் அமர தனியாகவும், பெண்கள் அமர தனியாகவும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நெரிசல் ஏற்படாமல் தடுக்க ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன.

    கூட்டத்திற்கு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×