என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனச்சோர்வுக்கான காரணங்கள்
    X
    மனச்சோர்வுக்கான காரணங்கள்

    மருத்துவம் அறிவோம் - மனச்சோர்வுக்கான காரணங்கள்

    மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் மனச்சோர்வுக்கான காரணங்கள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    மனச்சோர்வு என்ற இந்த வார்த்தையினை நாம் சர்வ சாதாரணமாகக் கேட்கின்றோம். அப்படி எளிதாக உபயோகித்து விடக்கூடிய வார்த்தையாக இது இருக்கக் கூடாது. இன்றைய இளைய சமுதாயம் கூட சிறிய ஏமாற்றங்களை, எதிர்பார்ப்பு நிறைவேறாமை போன்ற காரணங்களுக்காக ரொம்ப மனச்சோர்வு ஆகி விட்டதாகக் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளைப் பற்றி அறிந்தால் இவ்வாறு பேச மாட்டார்கள். மனச் சோர்வு என்பது பலவித காரணங்களால் ஏற்படுவது. கடுமையான நோய் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட காலம் அதிக மருத்துவ உதவியோடு இருப்பவர்கள் போன்றோருக்கும் மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். வாழ்க்கையில் ஏற்படும் சில விரும்பத்தகாத மாற்றங்கள், குறிப்பாக வேண்டப்பட்டவரின் உயிரிழப்பு, பிரிவு இவை கூட மனச் சோர்வு மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    * சிலருக்கு சிறு வயதில் பாலியல் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

    * பிறரால் அதிகம் துன்பப்படுத்தப்பட்டிருக் கலாம்.

    * கடுமையான வார்த்தைகளால் ஆழ்ந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

    * குடும்ப பிரச்சினை, பரம்பரையில் மன சோர்வு பாதிப்பு இருக்கலாம்.

    * சில குறிப்பிட்ட வகை மருந்துகளாலும் மனச்சோர்வு ஏற்படலாம்.

    * பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடுகள் கூடுதலாக இருக்கும். இதன் காரணமாக மனச்சோர்வு பாதிப்பு பெண்களுக்கு ஆண்களை விட அதிகம் ஏற்படுகின்றது.

    * மது, புகை இவை இரண்டுமே மனச் சோர்வினை அதிகரிக்கக் கூடியதே.

    * இன்றைய கால கட்டமானது ஒவ்வொரு மனிதனின் வீட்டிலும் சமு தாயத்திலும் எதிர் கொள் ளும் பிரச்சினைகளால் அதிக மனச் சோர் விற்கு ஆளாகி விடுவார் களோ என்ற கவலையையே உருவாக்குகின்றது.

    மருத்துவ ரீதியாக இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    இதில் மருத்துவ ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர் மூலம் ஆலோசனை பெற்றே சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். மனச்சோர்வின் அறிகுறிகளை கூறுவதே உடனடி யாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்று அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    சோர்ந்து இருக்கும் பல முதியவர்கள், உறவுகளின் உதவி இல்லாதவர்கள், தனித்து இருக்கும் முதியோர்கள் ஆகியோருக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது.

    சிறந்த மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் இதனை தவிர்ப்பதற்கும் சில அறிவுரைகளை வழங்குகின்றனர்.

    * ஒவ்வொருவரும் சில ஒழுங்கு முறைகளை இளம் வயதில் இருந்தே தினமும் கடைபிடிக்க வேண்டும். முறையான உணவு, தேவையான அளவு தூக்கம் இவை மனநலத்திற்கு மிக அவசியமான ஒன்று.

    * அடையக் கூடிய குறிக்கோள்களைவைத்து முயற்சி செய்வது நல்லது. இது கடலளவு ஆசை, அதிக ஏமாற்றம், தளர்ச்சி இவை களைத் தவிர்க்கும்.

    * உடற்பயிற்சி செய்வது நல்ல மன நலத் தினைத் தரும்.

    * ஆரோக்கியமான உணவு உடலுக்கு மட்டுமல்ல. மனதிற்கும் நல்லது.

    * ஒமேகா 3, போலிக் ஆசிட் போன்ற சத்து களை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * மன மகிழ்ச்சியோடு இருக்கக் கூடிய சூழ் நிலையில் இருக்க வேண்டும். அப்படியும் மன மகிழ்ச்சி இல்லை என்றால் மனச் சோர்வின் அறிகுறி களா என்று மருத்துவரின் ஆலோ சனை பெற வேண்டும்.

    சில அறிகுறிகள்...

    * எப்பொழுதும் சோகம், படபடப்பு, வாழ்வில் எதுவுமே இல்லாதது போன்ற உணர்வு.

    * தான் எதற்குமே பிரயோஜனமில்லை என்று நினைப்பது, பேசுவது.

    * ஏதோ ஒரு குற்ற உணர்வோடு இருப்பது.

    * தூக்கமின்மை, பசியின்மை (அ) மிக அதிகமாக உண்ணுதல்.

    * எந்த வேலையிலும் ஈடுபாடு இன்மை.

    * தனக்குத் தானே தீமை விளைவித்துக் கொள்ளுதல்.

    * எல்லோரிடமும், எல்லா நேரத்திலும் எரிச்சலுடன் இருத்தல்.

    * உடல் பலம் இன்றி இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தானே சரியாகிவிடும் என்று விட்டு விடாமல் மருத்துவர் ஆலோசனை பெறலாமே. வெளிநாடுகளில் மற்ற நோய்களுக்கு சிகிச்சை எடுப்பது போல் இதற்கும் எடுத்துக் கொள்கின்றனர். நம் நாட்டில் இன்னமும் அந்த அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் பாதிக்கப் படுபவரும் அவரது குடும்பமும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த நிலை மாற ஒவ்வொருவரின் தனி முயற்சியும் அவசியமே.

    சில தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஒருவித மன இறுக்கம், சோர்வு ஏற்படலாம். இதற்கு மருத்துவ ஆய்வாக சில காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. சில தாய்மார்களுக்கு மகப்பேற்றிற்குப் பிறகு ஒரு வித சோர்வு, ஒருவித மனமாற்றம் என்று இருக்கலாம். ஆனால் இவை ஒரு வாரத்திற்குள் தானாகவே போய்விடும். ஹார்மோன் மாறுபாடுகள் இதற்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகின்றது. புது பூவீன் வரவினை கையாளுவதில் சற்று தவிப்பு இருக்கலாம். உணவு, தூக்கம் இவற்றில் மாறுபடலாம்.

    நல்ல தூக்கம், நல்ல உணவு, மற்ற புது தாய் மார்களுடன் பகிர்ந்து கொள்வது இவையே ஒருவரை சரி செய்து விடும்.

    இதனால் தான் நம் முன்னோர்கள் பிரச வத்தினை தாய் வீட்டில் வைத்துக் கொண்டனர். தாய், பாட்டி, அத்தை என பலரின் கவனிப்பு குழந்தைக்கும், தாய்க்கும் கிடைத்தது. புது அனுபவம் சுமையின்றி இருந்தது. உண்மையில் நம் நாட்டில் இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    வெளி நாடுகளில் கர்ப்ப காலத்திலேயே பெற்றோர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன.

    ஆனால் ஒருசில தாய்மார்களுக்கு இந்த சோர்வு தொடரலாம்.

    * மகிழ்ச்சி இன்றி இருப்பர்.

    * வெளி உலக நாட்டம் இராது.

    * தூக்கமின்மை, அதிக பயம், அதிக கோபம் போன்றவை ஏற்படலாம்.

    * பொதுவில் இவர்களுக்கு கர்ப்ப காலத்திற்கு முன்புகூட ஏதோ ஒரு வகையில் மனச்சோர்வு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

    * கர்ப்பம் அடையும் பெண் மிக இளம் வயதாக இருக்கலாம். (இன்றைய காலத்தில் இவ்வாறு நிகழும் வாய்ப்புகள் மிகவும் குறைவு).

    * அதிக மகப்பேறு ஏற்படும் பொழுது சோர்வு ஏற்படலாம். (இந்த நிகழ்வும் இன்றைய கால கட்டத்தில் வெகுவாய் குறைந்து விட்டது).

    * பரம்பரையில் யாருக்கேனும் மனச்சோர்வு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

    * இரட்டை குழந்தைகள், மூன்று குழந்தைகள் ஒரே பிரச வத்தில் நிகழும் பொழுது குழந்தை வளர்ப்பு பெரிய சவாலாக இருக்கலாம்.

    * உறவுகளின் உதவி இல்லாது இருத்தல்.

    * தனிமை. மனவாழ்க்கை பிரச்சினை ஆகியவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைய மருத்துவம் கர்ப்ப காலம், மட்டும் அல்லாமல் மகப்பேற்றிற்கு பின்னரும் தாய்மார் களுக்கு அதிக கவனம் கொடுக்கின்றது.

    டாக்டர் கமலி ஸ்ரீபால்

    மேலும் உறவுகளின் ஆதரவும், அரவணைப் பும் அனைவருக்கும் அவசியம். இந்த உறவு களை முறிக்காமல் சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. மருத்துவரின் ஆலோசனை யையும், சிகிச்சையினையும் கவனத்தோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பயம் என்பது ஒரு கடினமான உணர்ச்சி. இது ஒவ்வொருவரின் மனதிலும், உடலிலும் அதிக பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. திடீரென ஏற்படும் விபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், இழப்பு போன்றவை யாருக்கும் ஒருவித பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது உண்மையே. சிலருக்கு இந்நிகழ்வுகள் ஏற்படுத்தும் மன பாதிப்பிற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

    சிலருக்கு நன்கு படித்தாலும் பரீட்சை என்றால் பயம், கூட்டத்தில் பேச பயம், பொது இடங்களில் பயம் இப்படி பல வகைகளில் இருக்கும்.

    * படபடப்பு * வேகமான மூச்சு * பலவீனமாக உணருதல் * வியர்த்து கொட்டுதல் * வயிற்று பிரட்டல் * வயிற்றுபோக்கு * மயக்கம் * வாய் வறண்டு விடுதல் போன்றவை ஏற்படும்.

    புதிய சூழல் கூட சிலருக்கு படபடப்பினை ஏற்படுத்தும். மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனை, ஊசி குத்திக் கொள்வதில் பயம் என்று இருக்கும்.

    பெற்றோர்கள் இவர்களுக்கு தொடர்ந்து நல்ல அறிவுரைகள் தர வேண்டும். உடலில் சத்து குறைபாடு இருந்தால் இவற்றுக்கு மருத்துவ உதவி வேண்டும்.

    உடற்பயிற்சி மிக நல்ல பலன் அளிக்கும். அந்த வகுப்புகளில் சேர்த்து விடலாம். வாழ்வினை எதிர் கொள்ளும் தைரியம் அளிக்க வேண்டும். யோகா, தியானம், விளையாட்டு இவற்றினை நன்கு பழக வேண்டும்.

    தேவைப்பட்டால் சிறிய வி‌ஷயம் என்று ஒதுக்காமல் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.

    நாம் என்ன நினைக்கின்றோமோ நாம் அதுவே ஆகின்றோம். ஆகவே நல்ல எண்ணங்களை மட்டும் நாம் நினைப்போம்.நல்ல செயல் களை செய்வோம். ஆக்கப்பூர்வமான சூழ்நிலையினை நமக்கும் சமுதாயத்திற்கும் உருவாக்குவோம். 

    சிறு வயதில் இருந்தே குழந்தை களை (அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி) பெற் றோர்கள் தன் கண்காணிப்பில் வளர்க்க வேண்டிய சூழ்நிலை அவசியமாகின்றது. ஆனால் இதை பல கார ணங்களால் பெற் றோர்களுக்கு முழுமை யாய் செய்ய முடிவ தில்லை. அநேகமாக ஒரே காரணம் பொருளாதார நிலை என லாம். இருப்பினும் குழந்தை கள் மன நலத்தோடு இருக்க வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்று. பலரும் வீட்டில் ஒரு உதவியா ளரை வைத்து விட்டு தான் வேலைக்கு செல்கின்றனர்.

    குழந்தை பராமரிப்பில் கவனம் வையுங்கள்

    சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தியினை நாம் சிந்திப்பதற்காக பகிர்ந்து கொள்கிறேன். ஒரு சிறு பையன் தன் தாயினைப் பார்த்துக் கேட்கின்றான். ‘அம்மா, பர்ஸ் நிறைய பணத் தினை வைத்து நம் வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பக்கத்தில் அதனை வைப்பீர்களா?’ அம்மா: ‘கண்டிப்பாக செய்ய மாட்டேன் மகனே’

    சிறுவன்: ‘பிறகு என்னை மட்டும் ஏன் அவர்களிடம் விட்டு விட்டுச் செல்கின்றீர் கள்?’

    அம்மா...???

    இது கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவசி யம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

    வீட்டுக்கு வேலை செய்ய வருபவர்களில் எத்தனையோ எண்ணற்ற நபர்கள் நேர்மையும், சத்தியமும் கொண்டவர்களாக இருக் கின்றனர். அவர்களுக்கு எல்லாம் கோடானு கோடி வணக்கங்கள். எல்லா இடத் திலும் சில வி‌ஷ குணம் கொண்ட வர்களும் இருக்கின்றனரே. இவர் களால் பாதிப்பிற்கு உள்ளாகும் குழந்தை களுக்கு ஒருவித மன பாதிப்பு ஏற்பட்டு விடு கின்றது. எனவே தான் கூட்டுக் குடும்பமும், நம்பகமான காப்பகங்களும் வலியுறுத்தப் படுகின்றது.
    Next Story
    ×