என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.– தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது: சீமான் பேச்சு
    X

    அ.தி.மு.க.– தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது: சீமான் பேச்சு

    அ.தி.மு.க.– தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என சீமான் பேசினார்.

    திருபத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

    தமிழர்களை காப்பற்ற திராவிட கட்சிகள் தவறி விட்டன. தமிழினத்தை காக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் மூடப்படும் என்றார் ஏனென்றால் திறந்தது அவர்தான் அதனால் சாவி அவரிடம் தான் இருக்கும் எனவே அவ்வாறு கூறினார்.

    தமிழர்களை அ.தி.மு.க தலை நிமிரச் செய்யும் என ஜெயலலிதா கூறினார் முதலில் உங்கள் அமைச்சர்களை தலை நிமிரச் செய்யுங்கள். அதற்கு பிறகு தமிழர்களை தலை நிமிரச் செய்வதை பற்றி நீங்கள் பேசலாம். திராவிட முன்னேற்றம் என்பது திருடர்களின் முன்னேற்றம் தானே தவிர தமிழர்களுக்கு முன்னேற்றம் கிடையாது மீண்டும் இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது.

    மக்கள் நினைத்தால் திராவிட கட்சிகள் தீக்குட்சிகளாக கூட இருக்கமுடியாது. மாற்றம் என்பது தாத்தா பாட்டியில் இருந்து வருவது இல்லை அடுத்த தலைமுறையில் இருந்து வருவது. கலைஞர் கடைசி தேர்தல் என 1996ல் இருந்து சொல்கிறார். இதுவரை சொன்னதை செய்ததே இல்லை. அதிகாரம் மிக வலிமையானது என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த அதிகாரத்தை மக்களாகிய உங்களுக்கே நாங்கள் பெற்று தருகிறோம். நாம் தலை நிமிர இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள்

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×