என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வினர் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது: இளங்கோவன் ஆவேசம்
    X

    அ.தி.மு.க.வினர் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது: இளங்கோவன் ஆவேசம்

    அ.தி.மு.க.வினர் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்று இளங்கோவன் ஆவேசமாக கூறினார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    இன்று மாலை திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு பேசுகிறேன்.

    அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.

    கரூர் மற்றும் சென்னையில் அ.தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இதேபோல் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும்.

    பணத்தை பறிமுதல் செய்வதோடு, அந்த பணம் எங்கிருந்து வந்தது, எவ்வளவு கிடைத்தது என்ற முழு விவரத்தையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் எடுபிடியாக செயல்பட்டது. அவர்கள் பணம் பட்டுவாடா செய்வதற்கும் உதவி செய்தது. இந்த தேர்தலில் அதுபோல் செயல்படாமல் நடு நிலையோடு செயல்பட வேண்டும்.

    காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரும் வருவார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அவர்களுக்கு சவுகரியமான நாட்களில் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள்.

    மூட்டை மூட்டையாக கொள்ளையடித்தவர்களுக்கு அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து உள்ளார்கள். தோல்வி பயத்தின் காரணமாக தொடர்ந்து வேட்பாளர்களை மாற்றி வருகிறார்கள்.

    பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் அது நடக்காது. அவர் சந்திக்கும் கடைசி தேர்தலாக இது வாகத்தான் இருக்கும்.

    வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தி ஏற்படுவது சகஜம் தான். அது சரியாகி விடும். அதேபோல்தான் தற்போது யசோதா அதிருப்தியில் இருக்கிறார். ஒருசில நாட்களில் அதிலிருந்து விடுபட்டு பிரசாரத்தில் ஈடுபடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×