என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக.வுக்கு சாதகமான சூழல் காணப்படுவதால் வரலட்சுமி மதுசூதனனின் வெற்றி உறுதி: தா.மோ.அன்பரசன்
    X

    திமுக.வுக்கு சாதகமான சூழல் காணப்படுவதால் வரலட்சுமி மதுசூதனனின் வெற்றி உறுதி: தா.மோ.அன்பரசன்

    தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் காணப்படுவதால் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி உறுதியாகி விட்டது என்று தா.மோ.அன்பரசன் பிரசாரம் செய்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில் சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்றது.

    காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு செங்கல்பட்டு தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனை அறிமுகப்படுத்தி பேசியதாவது:–

    செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் ஆப்பூர் ஊராட்சியில் இரண்டுமுறை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்று அப்பகுதியில் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றி வருகிறார். ஒன்றியத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே தி.மு.க. சின்னமான உதயசூரியன் மற்றும் வேட்பாளர் பெயரை எழுத வேண்டும். காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

    மகளிர் மற்றும் இளைஞர்களை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் நிலவுவதால் சுமார் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வரலட்சுமி மதுசூதனன் வெற்றிப்பெற செய்ய வேண்டும். அவரது வெற்றி உறுதி என்று கூறினார்.
    Next Story
    ×