என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தி.மு.க. கூட்டணியில் மூன்று சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் அறிவிப்பு
By
மாலை மலர்9 April 2016 10:35 AM GMT (Updated: 9 April 2016 10:35 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை அமைப்பு, ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் இன்று கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.
பெரம்பூர் தொகுதி கடந்த தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது அவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
கருணாநிதியை சந்தித்த பின்பு என்.ஆர்.தனபாலன் கூறுகையில், பெரம்பூர் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை நான் வெற்றி பெறுவேன். 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும். கருணாநிதி முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்த சமூக சமத்துவப் படைக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இன்று அந்த அமைப்பின் தலைவர் சிவகாமி கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டார். பின்னர் சிவகாமி கூறுகையில், பெரம்பலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என்றார்.
அதன்பிறகு பின்னர் விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அவருக்கு எத்தனை தொகுதி என்று விரையில் ஒதுக்கப்படும்.

Next Story
×