search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
    X

    புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தி.மு-.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் பட்டியல் நேற்று வெளியானது.

    தி.மு.க. கூட்டணியில் நேற்று புதிய தமிழகம் கட்சி இணைந்தது. அந்தகட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று பகல் 11.30 மணிக்கு அண்ணா அறிவலாலயம் சென்றார்.

    அங்கு அவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்துப் பேசினார். தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி ஆலோசனை நடத்தினார். இதில் அவர் விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
    இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை கிருஷ்ணசாமி சந்தித்து தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியல் உடன்பாட்டில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், “புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தாங்கள் விரும்பிய தொகுதியே கிடைத்து இருக்கிறது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை நாளை அறிவிப்பேன்” என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×