என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஆர்.கே.நகர் தொகுதியில் 256 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை: சென்னை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
By
மாலை மலர்30 Nov 2017 8:10 AM GMT (Updated: 30 Nov 2017 8:10 AM GMT)

ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை என்றும், 37 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறினார்.
சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் ஈடுபடுத்தப்படும். ஆனால் எந்த தேதியில் துணை ராணுவம் வருகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
தொகுதியில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனை மையங்களில் தீவிர கண்காணிப்புடன் சோதனையில் ஈடுபடுவார்கள். முறையற்ற முறையில் பணத்தை எடுத்து செல்வதை தடுக்கவே வாகன சோதனை நடத்தப்படுகிறது.
வியாபாரிகள் தங்கள் தொழில் ரீதியாக பணம் எடுத்து செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் வர்த்தக பிரமுகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மேலும் தொகுதி மக்களுக்கு டோக்கன் முறையிலோ, எஸ்.எம்.எஸ். வழியாகவோ வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வது தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். தேர்தலில் காவல்துறையின் பணி சிறப்பாக உள்ளது.
ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை. அதற்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளன. 37 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்படும். வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டு சேகரிக்கலாம். 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×