என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. இரு அணிகள் விரைவில் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் விரைவில் இணைந்து மக்கள் நல பணிகளில் ஈடுபட வேண்டுமென தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
காஞ்சீபுரம்:
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள காஞ்சீபுரம் வழியாக சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சீபுரம் வந்து காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நன்மைகளை செய்துள்ள நிலையில் திமுக மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது.

இது மக்களுக்கு இடையூறையே ஏற்படுத்தும். விவசாயிகளுக்காக மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முழுமையாக கொண்டு செல்ல வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடவேண்டும். விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையிலேயே நமது பணி இருக்க வேண்டும்.

இந்நிலையில் ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டமும், 25ம் தேதி அறிவித்துள்ள பந்தும் தேவையற்றது. இது மக்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை தராது. அதிமுகவின் இரண்டு அணிகளும் விரைவாக இணைய வேண்டும். இதில் ஏற்படும் தாமதம் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். எனவே இரு அணிகளும் விரைவில் இணைந்து மக்கள் நல பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story