search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேர்வாசல் வழியாக தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றும்: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    நேர்வாசல் வழியாக தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றும்: தமிழிசை சவுந்தரராஜன்

    தமிழகத்தில் பா.ஜனதா நேர்வாசல் வழியாக கால் ஊன்றும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மே 10-ந் தேதி தமிழகம் வருகிறார்.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி ஆகியோர் பா.ஜனதா தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று கூறுகிறார்கள்.



    தமிழகத்தில் பா.ஜனதா கண்டிப்பாக கால் ஊன்றும்.

    டெல்லியில் போராடும் விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடவில்லையென்றால் பல கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அவர்களை சந்தித்து பேசும்போது அவர்கள் போராட்டத்தை கைவிட்டிருக்கலாமே. ஏன் போராட்டத்தை கைவிடவில்லை.



    டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். நதிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி நதிகள் இணைப்பு சங்க விவசாயிகளை சந்தித்து பேசியது முரண்பாடானது.

    தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ராகுல் காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பேசி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×