என் மலர்

  செய்திகள்

  ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தி.மு.க-கூட்டணி கட்சிகள் நாளை கண்டன கூட்டம்-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
  X

  ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தி.மு.க-கூட்டணி கட்சிகள் நாளை கண்டன கூட்டம்-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்ப்பில் நாளை கண்டன கூட்டம். இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசர் பங்கேற்கவுள்ளனார்.

  சென்னை:

  ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகார் காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

  ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தலை ரத்து செய்ததாக கூறி தி.மு.க. நாளை கண்டன பொதுக் கூட்டம் நடத்துகிறது.

  இது குறித்து சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், முறை கேட்டில் ஈடுபட்ட முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் திடலில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நாளை (12-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.


  இந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

  இதில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகிறார்கள்.

  இந்த பொதுக் கூட்டத்திற்கு சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர் சனம் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வேட்பாளரான மருது கணேஷ் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.

  Next Story
  ×