என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்: தம்பிதுரை எம்.பி. பேட்டி
    X

    இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்: தம்பிதுரை எம்.பி. பேட்டி

    இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றாக செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒன்றுபட்டு தான் உள்ளோம். அ.தி.மு.க. கட்சிக்குள் பிளவுகள் இல்லை.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான். அந்த இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும். அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் ஒன்று பட்டு தான் இருக்கிறோம்.


    எங்களுடைய ஒரே குறிக்கோள் தி.மு.க. ஆட்சிக்கு வர கூடாது. இதே காரணத்தால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்து நின்றார்கள். அந்த உணர்வு, கொள்கை அ.தி.மு.க. தொண்டர்களிடையே உள்ளது.

    இந்த 4 ஆண்டுகள் மட்டும் இல்லை. எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறுஅவர் கூறினார்.

    Next Story
    ×