என் மலர்

  செய்திகள்

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரஸ் தேர்தல் பணியாற்றும்: திருநாவுக்கரசர் பேட்டி
  X

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரஸ் தேர்தல் பணியாற்றும்: திருநாவுக்கரசர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரஸ் தேர்தல் பணியாற்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியில் கூறியுள்ளார்.

  ஆலந்தூர்:

  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோவை செல்ல வந்த போது சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களை சந்தித்தார்.

  இப்போது கொடுக்கப்பட்டு இருக்கிற பட்ஜெட்டுக்கு இந்த அரசு புதிய அரசு. புதிய முதல்-அமைச்சர், புதிய நிதி அமைச்சர். எனவே இந்த பட்ஜெட்டில் புதியதாக எதுவும் வரவில்லை. இந்த பட்ஜெட்டில் பாராட்டக் கூடியது ஒன்றும் இல்லை. வழக்கமான ஒன்றாக உள்ளது.

  தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

  தமிழ்நாட்டுக்கு புதியதாக 10 ஆயிரம் போலீசார் எடுப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. அதை இந்த ஆண்டே எடுக்க வேண்டும்.


  தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் பிச்சினை உள்ளது. அதற்காக எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை.

  மத்திய அரசு தர வேண்டிய வறட்சி மற்றும் வார்தா புயல் நிதியை இன்னும் தமிழ்நாட்டுக்கு தரவில்லை. அதை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  இறந்த மாணவர் முத்து கிருஷ்ணனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ. 1 லட்சம் நிதி வழங்க உள்ளோம்.

  ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். நாங்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்றுவோம்.


  நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். அதை மத்திய அரசிடமோ அல்லது உச்ச நீதிமன்றம் சென்றோ பெற வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×