search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ். அணியினர் 14 வட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
    X

    ஓ.பி.எஸ். அணியினர் 14 வட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

    ஓ.பி.எஸ். அணியினர் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சி ரீதியாக 14 வட்டங்களாக பிரித்து தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியதையடுத்து தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.

    பிரதான ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 3 பிரிவுகளாக போட்டியிடுகிறது. இதில் டி.டி.வி. தினகரன் - ஓ.பி.எஸ். அணி இடையே தான் அ.தி.மு.க. ஓட்டுக்களை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.



    இரு அணிகளும் தேர்தல் களத்தில் இறங்கி பணிகளை செய்ய தொடங்கி விட்டனர். ஓ.பி.எஸ். அணியினர் அத்தொகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சி ரீதியாக 14 வட்டங்களாக பிரித்து தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    ஆர்.கே. நகர் தொகுதியில் மாநகராட்சி ரீதியாக 38, 39, 40, 41, 42, 43, 47 ஆகிய வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டையும் இரண்டாக பிரித்து தேர்தல் பணி செய்ய வசதியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.



    தேர்தல் பொறுப்பாளர்களாக பொன்னையன், பி.எச்.பாண்டியன், செம்மலை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர், மாபா. பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செங்கை ராமச்சந்திரன், கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்த மாலையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.

    ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டு வாக்காளர்களை விரைவாக சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×