என் மலர்

  செய்திகள்

  என் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்கிறேன்: சபாநாயகர் அறிவிப்பு
  X

  என் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்கிறேன்: சபாநாயகர் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த கூட்டத்தொடரிலேயே எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
  சென்னை:

  தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து சபாநாயகர் மீது தி.மு.க. கொடுத்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

  இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே வேறு எதுவும் விவாதிக்க வேண்டாம். நீங்கள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விதிகளின்படி இந்த கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்கிறேன்.

  நீங்கள் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 2 கடிதம் கொடுத்திருந்தீர்கள். முதல் கடிதம் விதிகளின்படி தரவில்லை.

  அதன்பிறகு கடந்த 9-ந்தேதி விதிகளின்படி கடிதம் தந்தீர்கள். உறுப்பினர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். அதை எப்போது எடுப்பது என்று இன்னும் முடிவாகவில்லை. நீங்கள் கடிதம் கொடுத்த 14 நாட்கள் கழித்து எடுத்துக் கொள்ள முடியும்.

  எனவே இந்த கூட்டத் தொடரிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தை உறுதியாக எடுத்துக் கொள்வேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×