search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்: நாராயணசாமி பேட்டி
    X

    ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்: நாராயணசாமி பேட்டி

    ஆர்.கே. நகரில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவும், பிரகாசமாகவும் உள்ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் சரக்குகள், புதுச்சேரி துணை துறைமுகத்திற்கு கண்டெய்னர்கள் மூலம் ஏற்றி சென்று அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு அனுப்புவது, மற்றும் புதுவை வரும் சரக்குகள் சென்னை துறைமுகத்திற்கு அனுப்புவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் கையெழுத்தாகிறது.

    சென்னை துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள், கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் சரக்கை இறக்க 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. அந்த கால கெடுவை குறைக்க புதுச்சேரி துறைமுகத்தை சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். இதில் வரும் வருமானம் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.



    சென்னை ஆர்.கே. நகரில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. ஆர்.கே. நகரை பொறுத்த மட்டும் கொடுக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவும், பிரகாசமாகவும் உள்ளது. தமிழக மாணவர் தற்கொலைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னையில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×