என் மலர்

  செய்திகள்

  ஓ.பன்னீர்செல்வம் - ஜெ.தீபா இருவரில் அரசியலில் நிலைத்து நிற்பவர் பக்கம் செல்வோம்: தொண்டர்
  X

  ஓ.பன்னீர்செல்வம் - ஜெ.தீபா இருவரில் அரசியலில் நிலைத்து நிற்பவர் பக்கம் செல்வோம்: தொண்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகிய இருவரில் தமிழக அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர்கள் பக்கம் செல்வோம் என்று ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் கூறினார்.
  சென்னை:

  ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா’ என்ற பெயரில் புதிய பேரவையை தொடங்கினார். அன்றைய தினமே கட்சி கொடியையும், பொறுப்பாளர்கள் பட்டியல் பெயரையும் வெளியிட்டார்.

  கடந்த 12-ந் தேதி காலையில் உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் ஜெ.தீபா பேரவையின் சார்பில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் இரவு ஜெ.தீபா மெரினா கடற்கரைக்கு சென்றார்.

  அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை போன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார். அதன் பின்பு ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் தான் நிற்கக்கூடாது என்று சிலர் தன்னை போனில் மிரட்டுவதாக கூறினார்.

  இந்த கருத்து ஜெ.தீபா ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் சமூக வலைத்தளங்களில் ஓ.பன்னீர்செல்வம் வழியை ஜெ.தீபா பின்பற்றுகிறார் என்றும், இந்த நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த செயல் ஜெ.தீபா ஆதரவாளர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

  இடைத்தேர்தல் வேலைகள் நிறைய இருக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்காமல் ஜெ.தீபா சமாதியில் போய் தியானம் நடத்தியது ஏன்? ஜெ.தீபா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிற்பேன் என்று கூறுகிறார். ஆனால் அதற்கான செயல்பாடுகள் ஏதும் எடுக்கவில்லை. பிறகு எப்படி இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியும் என தொண்டர்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

  இதனால் சில தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு ஒரு நாளும், ஜெ.தீபா வீட்டின் முன்பு ஒரு நாளும் மாறி மாறி நிற்கின்றனர்.

  இதுகுறித்து தொண்டர் ஒருவர் கூறுகையில், “தற்போது உள்ள சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா ஆகிய இருவரில் யார் தமிழக அரசியல் களத்தில் நிலைத்து நிற்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை அதனால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு ஒரு நாளும், ஜெ.தீபா வீட்டின் முன்பு ஒரு நாளும் நின்று வருகிறோம். இவர்களில் யார் தமிழக அரசியல் களத்தில் நிலைத்து நிற்கிறார்களோ? அவர்கள் பக்கம் நாங்கள் செல்வோம். அவர்களுக்கு பின்னால் நின்று அவர்கள் வளர்ச்சிக்கு மேலும் பாடுபடுவோம். ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் இதற்கு எல்லாம் ஒரு முடிவு வந்து விடும்” என்று கூறினார்.


  ஜெ.தீபா வீட்டின் முன்பு நேற்று கூடியிருந்த தொண்டர்கள் சிலர் ஜெ.தீபா பேரவையின் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வாங்கிய போது எடுத்த படம்.

  இந்த நிலையில் ஜெ.தீபாவின் வீட்டிற்கு நேற்று வந்த தொண்டர்கள் சிலர் ஜெ.தீபா பேரவையின் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வாங்கி சென்றனர்.

  Next Story
  ×