என் மலர்

    செய்திகள்

    தமிழக சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை: வைகோ
    X

    தமிழக சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை: வைகோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். அப்போது கவர்னர் அவரிடம் மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் கெடுவும் விதித்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் ஏன்? அது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.

    பின்னர் 2 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டிய போது ஸ்டாலின் இன்னும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்றார். அவர் இதுபோன்று முன்னுக்குப்பின் முரணாக பலமுறை பேசியுள்ளார்.

    இதற்கான காரணம் என்னவென்றால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ள பழனிச்சாமி அணியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை வெளியே கொண்டு வரலாம் என்ற காரணத்தாலும், அது முடியாமல் போனதால் சட்டசபையில் வேண்டும் என்றே கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர செய்த திட்டம் தான் அது.

    மு.க.ஸ்டாலின் தன்னை சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்ததாக கூறினார். அதே நேரம் சபாநாயகர் தனபாலின் கையை இழுத்து சட்டை கிழிக்கப்படுவதை நாம் தொலைக்காட்சியில் நேரில் பார்த்தோம். ஆனால் தனது சட்டையை கிழித்து விட்டார்கள் என சபாநாயகர் நீலிகண்ணீர் வடிக்கிறார் என தி.மு.க.வினர் கூறினர்.

    இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக சபாநாயகர் தனபால் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும், 11 எம்.எல்.ஏ.க்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று சேர்ந்து ஓட்டு போட்டாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெற செய்ய வாய்ப்பில்லை.

    தொகுதி மக்களிடம் கருத்து கேட்டு விட்டு ஓட்டு போட வேண்டும் என்று கூற யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எப்படியாவது தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சி அமைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்கள் இதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த போது நான் நலம் விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரி சென்ற போது வேண்டும் என்றே என் மீது தாக்குதல் நடத்தி கலவரம் ஏற்படுத்தினார்கள். பின்னர் அவர் இச்சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என கூறி மன்னிப்பும் கேட்கிறார்கள். சட்டசபைக்கு வரும் வாகனங்களில் ஆயுதங்கள் ஏதும் உள்ளதா? என காவலர்கள் சோதனை நடத்துவது வழக்கம் தான். அதுபோல தான் மு.க.ஸ்டாலின் வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தவறில்லை.



    எனவே சட்டசபையில் கலவரத்தை யார் ஏற்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே சிலர் பணம் செலவழித்து அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலில் மக்கள் தங்கள் எண்ணப்படி வாக்களிப்பார்கள். 500 மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார். அது போதாது. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு முன்வரவேண்டும்.

    இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று தமிழர்களை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி தொடர வேண்டும் என பிரதமர், மத்திய மந்திரியிடம் வலியுறுத்தினேன்.

    தற்போது அதற்கு அனுமதி கிடைத்து உள்ளதாக மத்திய அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    பின்னர் வைகோ குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகளிடம் தமிழ் இலக்கியம் குறித்து கலந்துரையாடினார். அப்போது வைகோ பேசுகையில், ‘நான் கல்லூரி பேராசிரியராக பணியாற்ற விரும்பினேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அரசியலுக்கு வந்து விட்டேன். எனவே நீங்கள் விரும்பினால் கல்லூரிக்கு நேரில் வந்து பேச தயாராக இருக்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×