என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்தபடம்.
    X
    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்தபடம்.

    அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ்

    கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என ராமதாஸ் பேசியுள்ளார்.
    புவனகிரி:

    பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்(கடலூர் தெற்கு) செல்வ மகேஷ் முன்னிலை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது,

    கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    என்றைக்கு அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கிறாரோ அதன்பின்னர் தான் பா.ம.க.வினர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

    சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த டாக்டர் ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×