என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் அன்பழகன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
    X
    திருமண விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் அன்பழகன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

    மக்களை இனி ஏமாற்ற முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

    எதை வேண்டுமானாலும் செய்யலாம் மக்களை ஏமாற்றலாம் என நினைப்பவர்களுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது என இளங்கோவன் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மேட்டுக்கடையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம் நடந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும் தட்டிக்கேட்க ஆள்இல்லை என்றுசெயல்பட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தனர். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைஉள்ளது. அதை செய்துமுடித்தவர் பெருமைக்குரிய பேராசிரியர் அன்பழகன் ஆவார்.

    எதை வேண்டுமானாலும் செய்யலாம் மக்களை ஏமாற்றலாம் என நினைப்பவர்களுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது. இதுஒரு திருப்புமுனை ஆகும்.

    கல்லறைக்கு சென்று சமாதியில் இந்த அடி அடித்தவர்கள் அவர் உயிரோடு இருக்கும்போது எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
    Next Story
    ×